26.8 C
Jaffna
December 14, 2024
Pagetamil
மலையகம்

அச்சுறுத்தியவரை கைதுசெய்யுமாறு கோரி நோர்வூட் பிரதேசசபை உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்!

நோர்வூட் பிரதேசசபையின் உத்தியோகத்தர்களின் சேவைக்கு இடையூருரினை
ஏற்படுத்தி உத்தியோகத்தர்களை அச்சுரு்த்திய நபரை கைது செய்யும்மாறு கோரி இன்று (13) வெள்ளிக்கிழமை காலை நேர்வூட் பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள்
பணிபகிஷ்கரிப்பல் ஈடுபட்டதோடு நோர்வூட் பிரதேசசபை முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்று காலை 08.30 மணியில் இருந்து காலை 11மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, உள்ளுராட்சி சட்டங்களை மதிக்க தெரிந்துக்கொள், அரச உத்தியோகத்தர்களை அச்சுறுத்தியவர்களை கைது செய், நிலைநாட்டு நிலைநாட்டு சட்டத்தை நிலைநாட்டு, பாதுகாப்பு தரப்பே அரசியலுக்கு அடிபணியாதே போன்ற
கோசங்களையும் பாதாதைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர் .

இம் மாதம் 11ம் திகதி செவ்வாய்கிழமை புளியாவத்தை பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடை ஒன்று அனுமதி பத்திரம் பெறாது கோழி இறைச்சி விற்பனை
செய்வதாக வெளியான தகவலையடுத்து, அங்கு சென்ற நோர்வூட் பிரதேசசபை உத்தியோகத்தர்களை அந்த பகுதியில் உள்ள நபர் ஒருவர் அச்சுறுத்தினார்.

உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, தகாத வார்த்தைகள் பிரயோகித்தமை தொர்பில்  நோர்வூட் பிரதேசசபையின் செயலாளரினால் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட நபர் இதுவரையிலும் கைது செய்யப்பட்வில்லை.

அச்சுறுத்திய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும், தமக்கு பாதுகாப்பு வேண்டும், இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கொவல்தெனியவை தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பில்
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில் கடைக்காரரை தாக்கிய சாரதிகள்

Pagetamil

நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியில் மண்சரிவு!

Pagetamil

21 வயது மனைவியின் வாயை வெட்டிய 39 வயது கணவன்!

Pagetamil

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு

Pagetamil

விபத்தில் இரண்டாகிய தனியார் பேருந்து!

Pagetamil

Leave a Comment