முட்டை உற்பத்தி செலவை வாரந்தோறும் கணக்கிட்டு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தையில் முட்டையின் விலை தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களம் டிசம்பர் வரை ஒரு முட்டையின் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு மாதந்தோறும் வெளியிட்டது.
இந்த வாரம் முதல் வெள்ளிக்கிழமைகளில் முட்டையின் உற்பத்தி விலை வெளியிடப்படும் என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தற்போதைய கணக்கீடுகளின்படி, ஒரு முட்டையை இறுதி நுகர்வோருக்கு ரூ.50க்கு வழங்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. சமீப வாரங்களில் முட்டை விலை ரூ.70 வரை உயர்ந்திருந்தது.
எனினும், முட்டை இறக்குமதி செய்ய உள்ளதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளது.
உற்பத்தியாளர்கள் முட்டைகளை லொரிகளில் முக்கிய ஊர்களுக்கு கொண்டு சென்று தலா ரூ.53க்கு விற்பனை செய்து வருகின்றனர்.