உள்ளூராட்சி தேர்தலிற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை (12) கட்டுப்பணம் செலுத்தவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த ரெலோ, புளொட் கட்சிகளுடன் ஏற்பட்ட ஆசன பங்கீட்டு குழப்பத்தையடுத்து, தமிழ் அரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
ரெலோ, புளொட் கட்சிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலும் வலுவடைந்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட நேற்று கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை (12) மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்துகிறது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1