இளம் யுவதிகள் வடமாகாணத்திலிருந்து கொழும்பிற்கு சென்று விபச்சாரத்தில் ஈடுபடும் போக்கு அதிகரித்துள்ளதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் எச்சரித்துள்ளது.
அண்மையில் கொழும்பு கோட்டை, மஹரகம மற்றும் மருதானை பிரதேசங்களிலுள்ள விடுதிகளை சோதனையிட்டு 19 பெண்களை பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் கைது செய்துள்ளது.
ஆயுர்வேத சிகிச்சை நிலையங்கள், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையிலும், இரகசிய விபச்சார விடுதிகளாகவும் இவை இயங்கின.
கைதான 19 பெண்களில் 11 பேர் வடமாகாணத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள் யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா பகுதிகளை சேர்ந்தவர்கள்.
தாங்கள் முதலில் கொழும்புக்கு வந்து ஆடைத் தொழிற்சாலைகளில் வேலை செய்ததாகவும், தமக்குக் கிடைக்கும் சம்பளம் போதாதென்று விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1