Pagetamil
சினிமா

நடிகை நெஞ்சில் சிகரெட் போட்டு பிடிக்கும் பாலகிருஷ்ணா: சர்ச்சையை கிளப்பும் வீரசிம்மா ரெட்டி ட்ரெயிலர்!

நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே விளாசி வருகின்றனர்.

ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி என இரு மூத்த ஹீரோக்களின் படங்கள் வெளியாகிறது.

2 படங்களிலும் சுருதிஹாசன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இந்த படங்களின் டிரைலர்கள் வெளியாகி உள்ளது. பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி டிரைலர் வெளியாகி 17 மணி நேரத்தில் 52 லட்சம் வியூஸ் கடந்துள்ள நிலையில், அந்த டிரைலரில் ஹீரோயின் நெஞ்சில் சிகரெட்டை போட்டு தனது வாயில் பிடிக்கும் காட்சி ஒன்று மின்னல் வேகத்தில் வந்து சென்றாலும் பலரையும் அந்த காட்சி முகம் சுளிக்க வைத்துள்ளது.

சிகரெட் பிடிப்பதே தவறு, இதில் ஒரு நடிகையின் மார்பில் சிகரெட்டை போட்டு பிடிப்பது சரியா என தெலுங்கு சினிமா ரசிகர்களே விளாசி வருகின்றனர்.

சுருதிஹாசன், ஹனிரோஸ் என இரு ஹீரோயின்கள் படத்தில் நடித்துள்ளனர். அவர்கள் இருவர் நெஞ்சிலும் இல்லை என்றும் குத்தாட்டப் பாடலில் நடித்துள்ள இருட்டு அறையில் முரட்டுக் குத்து புகழ் சந்திரிகா ரவியின் நெஞ்சில் தான் பாலகிருஷ்ணா சிகரெட் போட்டு பிடித்துள்ளார் என அவரது ரசிகர்கள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கணவரை பிரிந்தார் அபர்ணா வினோத்!

Pagetamil

ரவி மோகன் – ஆர்த்தி தம்பதி விவாகரத்து வழக்கு: நீதிபதியின் உத்தரவு என்ன?

Pagetamil

பாலையாவுடன் நடன சர்ச்சை: ஊர்வசி ரவுதெலா விளக்கம்

Pagetamil

பிரபல நடிகர் சயிப் அலிகான் மீது வீடு புகுந்து தாக்குதல்

east tamil

‘பகவந்த் கேசரி’ ரீமேக்தான் ‘விஜய் 69’ – உடைந்த ரகசியம்

Pagetamil

Leave a Comment