ஐக்கிய மக்கள் சக்தி மன்னார் மாவட்ட அரசியல் நிலவரம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பான ஆலோசனை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று சனிக்கிழமை(7) மாலை 4 மணியளவில் மணிக்கு மன்னாரில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது. இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, உமா சந்திர பிரகாஷ் மற்றும் வவுனியா மன்னார் மாவட்ட கட்சியின் இணைப்பாளர்கள் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
‘மாற்றத்திற்கான புதிய ஆரம்பம்’ எனும் தொனிப் பொருளில் வளமான அபிவிருத்தி வளமான எதிர்காலத்திற்கு எங்களின் ஒன்றிணைந்த தெரிவு என்பதன் அடிப்படையில் நமக்காக நாம் ஒன்றிணைவோம் என்பதை வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை வலுப்படுத்த வெற்றி பெற செய்வதன் நோக்கமாகக் கொண்டு குறித்த கூட்டம் இடம்பெற்றது.