Pagetamil
முக்கியச் செய்திகள்

இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் பிளவு: மத்தியகுழுவின் முடிவிற்கு கீழ் மட்ட உறுப்பினர்கள் எதிர்ப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைத்து, உள்ளூராட்சிசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து, கட்சிக்குள் பலத்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. கட்சியின் மத்தியகுழுவின் தீர்மானம் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழுவில் நேற்று தீர்மானிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கும் வகையிலான நடவடிக்கை மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பை தோற்றுவிக்கும் என்பதால், அந்த தீர்மானத்தை நாசூக்காக அறிவிப்பதென கலந்துரையாடப்பட்டு, கூட்டமைப்பு ஒற்றுமையாக, தனித்து போட்டியிடுமென அறிவிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைக்கும் முதற்கட்ட நடவடிக்கையென பரவலாக மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியது.

இந்த அதிருப்தி, கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள், தொகுதிக்கிளைகள் மத்தியிலும் உருவாகியுள்ளது.

இலங்கை தமிழ் அரநு கட்சியில் நேற்று, தனித்து போட்டியிடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. இன்றைய முதல்நாளில்  மட்டும், யாழ் மாவட்டத்தின் 3 தொகுதிக்கிளைகள் தமது எதிர்ப்பை கட்சித் தலைமைக்கு தெரிவித்துள்ளதாக தமிழ்பக்கம் அறிகிறது.

கிழக்கு, வடக்கை சேர்ந்த மேலும் சில தொகுதிக்கிளைகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இதுதவிர, கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்கள் பலர் கட்சி பிரமுகர்களிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டு, தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய மத்தியகுழு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனித்து போட்டியிடும் முடிவை ஆதரித்த கட்சி பிரமுகர் ஒருவர், இன்று தமிழ்பக்கத்துடன் பேசும்போது, இந்த முடிவை ஆதரிக்காமல் பொறுமை காத்திருக்கலாமென இப்போது உணர்வதாக தெரிவித்தார்.

கட்சியின் உறுப்பினர்கள் பலர் தன்னை தொலைபேசியில்  அழைத்து, முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

திருகோணமலை, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் கட்சித் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக, அந்த பகுதிகளில் உள்ள தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் வழியாக தமிழ்பக்கம் அறிந்தது.

மத்தியகுழுவின் முடிவை இரா.சம்பந்தன் ஏற்கக்கூடாதென தெரிவிக்கும்படி கட்சி தலைமைக்கு தாம் வலியுறுத்தியதாகவும், ஒரு வேளை, மத்தியகுழுவின் முடிவை இரா.சம்பந்தன் ஏற்கும் பட்சத்தில், தாம் தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே தொடர்வோம், இலங்கை தமிழ் அரசு கட்சியாக செயற்படமாட்டோம் என தெரிவித்ததாகவும், யாழ் மாவட்டத்திலுள்ள இரண்டு தொகுதிக்கிளைகளின் பிரமுகர்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

இதேவேளை, கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களை சமரசப்படுத்தும் முயற்சிகளும், மத்தியகுழுவில் அங்கம் வகிக்கும் பிரமுகர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று, மட்டக்களப்பில் அவ்வாறான சில கூட்டங்கள் இடம்பெற்றன.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

நீண்ட வரிசைகள்: எரிபொருள் தட்டுப்பாடு இல்லையென்கிறது பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

Pagetamil

சங்கு கூட்டணியில் இணையாமலிருக்க தமிழ் மக்கள் கூட்டணி, ஐங்கரநேசன் தரப்பு தீர்மானம்: பணம் வழங்குபவர்களின் அழுத்தத்தால் முடிவு?

Pagetamil

Leave a Comment