Pagetamil
இலங்கை

குமார் பொன்னம்பலம் நினைவு

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வும் நினைவுப் பேருரையையும் இன்று இடம்பெற்றது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், குமர் பொன்னம்பலத்தின் புதல்வருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மலர் மாலை அணிவித்து ஈகை சுடரும் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும், பொதுமக்களும் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட நுண்கலைத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுப் பேருரையினை ஆற்றியிருந்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மத குருமார்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரயில் சேவைகள் ரத்து: பயணிகள் கடும் சிரமத்தில்

east tamil

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

east tamil

துமிந்த சில்வா, ஹிரு பற்றிய தகவல்களை வெளியிட தடை

Pagetamil

பட்டம் விட்ட சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி

east tamil

பொங்குதமிழ் பிரகடனத்தின் 24 ஆவது ஆண்டு எழுச்சிநாள் நிகழ்வுகள்

Pagetamil

Leave a Comment