2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி முதல் காணாமல் போன கெங்கல்லை, அம்பகோட்டே பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
15 வயதுடைய சிறுமி பாடசாலை முடிந்து வீடு திரும்பவில்லை என சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி பாடசாலையை முடித்து விட்டு பாடசாலையைச் சேர்ந்த மற்றுமொரு சிறுமியுடன் புகையிரதத்தில் கொழும்பு நோக்கி பயணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மற்றைய சிறுமியை இளைஞர் ஒருவர் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளார்.
ரயிலில் இருந்த இந்த சிறுமி காணாமல் போனார்.
இந்த சிறுமியின் இருப்பிடம் தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்கள் மூலம் தெரியப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் – 081-2374073
OIC தெல்தெனிய – 071 – 8591066