வவுனியா – மன்னார் வீதி, இரண்டாம் கட்டைப்பகுதியிலுள்ள ஆசிரியரின் வீட்டில் தங்க நகைகள், பணம் என்பன திருட்டு போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கணவன், மனைவி இருவரும் ஆசிரியர்களாக சேவையாற்றி வரும் இவர்களின் வீட்டில், சில தினங்களுக்கு முன்னர், சங்கிலி, தோடு, பணம் என்பன திருட்டுப்போயுள்ளது.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், அவ்வீட்டில் பணியாற்றிய சிதம்பரபுரம் பகுதியை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டபோது, திருடப்பட்ட நகை, பணம் என்பன கண்டு பிடிக்கப்பட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1