Pagetamil
இலங்கை

டயானா வழக்கில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதற்காக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய ஆவணங்களை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திடம் இருந்து உரிய ஆவணங்களை நீதிமன்றம் பெற்றுக்கொள்ளும் வரை கைது உத்தரவு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பிப்பது பொருத்தமானதல்ல என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தொடரப்பட்ட முறைப்பாடு தொடர்பில் நீதவான் விசாரணைக்கு முன்னதாக நீதிமன்றம் அவருக்கு பயணத்தடை விதித்திருந்தது.

2021 ஆம் ஆண்டில், டயானா கமகே இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து இல்லாமல் இலங்கையில் வசிக்கும் பிரித்தானியப் பிரஜை என்ற புகாரின் பேரில் அவருக்கு எதிராக சிஐடி தலைமை நீதவான் நீதிமன்றத்தில் பி அறிக்கையை தாக்கல் செய்தது.

சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் செய்த முறைப்பாட்டையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கையில் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை

east tamil

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

east tamil

அனுர அரசின் மாற்றம் இதுதான்!

Pagetamil

கிளிநொச்சியில் கால் வீக்கத்தால் துன்பப்படும் காட்டு யானை

east tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான போக்குவரத்து தடங்கல்

east tamil

Leave a Comment