இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பந்துவீசும் இந்திய அணியின் பந்துவீச்சார் அர்ஷ்தீப் சிங் மோசமான சாதனையொன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியின் இரண்டாவது ஓவரில் அவர் தொடர்ந்து 3 நோ போல்களை வீசினார்.
அர்ஷ்தீப் தனது ஓவரின் கடைசி பந்தில் தொடர்ந்து மூன்று நோ-போல்களை வீசினார், இப்படி பந்துவீசிய முதல் இந்திய பந்துவீச்சாளரானார்.
இந்த ஒரு பந்தில் அவர் 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
அர்ஷ்தீப் முதல் ஐந்து பந்துகளில் ஐந்து ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி பந்து நோ போல். ரன் இல்லை. அடுத்த பந்து ப்ரீ ஹிட். குஷால் மெண்டிஸ் ஒரு பவுண்டரி அடித்தார். இதுவும் நோ போல். அடுத்த ஃப்ரீ ஹிட்டும் நோ போல். மெண்டிஸ் அதை சிக்ஸருக்கு அடித்தார். இறுதியாக சிங்கிள் கிடைத்தது. மொத்தமாக இந்த ஓவரில் 19 ஓட்டங்கள் பெறப்பட்டது.
அர்ஷ்தீப்பின் ரி20 சர்வதேச வாழ்க்கையில் இது இரண்டாவது மோசமான ஓவராக மாறியுள்ளது. கடந்த ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக 22 ரன்கள்கொடுத்திருந்தார்.