தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்குமிடையிலான சந்திப்பு நாளை (5) நடைபெறவுள்ளது.
நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.
அரசுக்கும், தமிழ் கட்சிகளிற்கிடையிலும் நடைபெறவுள்ள பேச்சுக்களிற்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பு தயாரிப்பிற்காக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முறை தமிழ் கட்சிகளிற்கும், ஜனாதிபதிக்குமிடையில் எம்.ஏ.சுமந்திரனின் ஏற்பாட்டில் நடந்த சந்திப்பு வெற்றியளிக்கவில்லை. அதை தொடர்ந்து சச்சரவுகளும் ஏற்பட்டிருந்தன.
இதையடுத்து, நாளைய சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்கொண்டுள்ளார். இன்று மாலை அவரே தொலைபேசியில் இரா.சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தனித்தனியாக தொடர்பு கொண்டு, நாளைய சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1