அனைத்து வகையான மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு இன்று (03) அறிவித்துள்ளது.
வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகை மதுபானங்கள் மீதான வற் வரி 20% அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இன்று (03) நள்ளிரவு முதல் மதுபானத்திற்கான வற் வரி அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மதுபானம் மீதான கலால் வரி 20% அதிகரிப்பு காரணமாக, 750ml ஸ்பெஷல் அர்ராக் போத்தல் ஒன்றின் விலை 206 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. உள்நாட்டில் காய்ச்சப்படும் வெளிநாட்டு மதுபானம் 266 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. பியர் (4.8% – 625ml) ரூ.21 மற்றும் பியர் (8.8% – 625ml) ரூ. 39 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சிகரட் மீதான வற் வரியும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கான கலால் வரி அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
ரூ.90 சிகரெட் விலை ரூ.105, ரூ.85 சிகரெட் விலை ரூ.100, ரூ.70 சிகரெட் விலை ரூ.80, ரூ.60 சிகரெட் விலை ரூ.70, ரூ.15 சிகரெட்விலை ரூ.24 ஆக அதிகரிக்கப்படும்.