பெப்ரவரி 17இல் 3டியில் வெளியாகும் சமந்தாவின் ‘சாகுந்தலம்’

Date:

நடிகை சமந்தாவின் ‘சாகுந்தலம்’ திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் பெப்ரவரி 17ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தில்ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட திகதியில் படம் வெளியாகவில்லை. ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு திகதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் படத்தின் 3டி தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளதால் படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சாகுந்தலம்’ படம் வரும் பெப்ரவரி 17ஆம் திகதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்