நடிகை பவித்ராவை மணக்கிறார் நரேஷ்

Date:

புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

தமிழில், ‘கவுரவம்’, ‘அயோக்யா’, ‘க/பெ.ரணசிங்கம்’, ‘வீட்ல விசேஷம்’ உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தெலுங்கிலும் நடித்து வருகிறார். இவரும் தெலுங்கு நடிகர் நரேஷ் பாபுவும் காதலித்து வருகின்றனர்.

நரேஷ், தமிழில் ‘நெஞ்சத்தை அள்ளித்தா’, ‘பொருத்தம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ், மூன்று முறை திருமணம் செய்தவர். இருவரை விவாகரத்து செய்த அவர், மூன்றாவது மனைவியிடம் விவாகரத்து கோரியுள்ளதாகக் கூறப்பட்டது. பவித்ராவும் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர்.

இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு நரேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் “புதிய வாழ்க்கையை தொடங்குகிறோம். விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” – திருமாவளவன் திடீர் அறிவிப்பு

“எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை” என விசிக தலைவர்...

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் இன்றும் தொடரும்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தத்தை...

வவுனியாவில் கஞ்சாவுடன் 2 பொலிஸ்காரர்கள் கைது!

வவுனியாவில் கஞ்சாவுடன் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்