ஹட்டன் கல்வி வலையம் கோட்டம் ழூன்றுக்கு உட்பட்ட சாமிமலை தெய்வகந்த
தமிழ் வித்தியாலயத்தினை கைப்பற்றி வைத்திருந்த ஆசிரியரை வெளியேறுமாறு
கோரி பெற்றோர்கள் இன்று (02) திங்கள்கிழமை காலையில் இருந்து பாடசாலைக்கு
முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாமிமலை தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் ஊடாக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த பாடசாலைக்கு அதிபர் தகுதியுள்ள புதிய அதிபர் ஒருவரை பொறுப்பேற்குமாறு ஹட்டன் வலய கல்வி பணிப்பாளரினால் எழுத்து ழூலமாக கடிதம் ஒன்று அனுப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் அனைத்தும் முன்றாம் தவணையின் முதலாம்
கட்ட கல்வி நடவடிக்கை இன்றய தினம் ஆரம்பிக்கப்பட்டன. இந் நிலையில் இன்று காலை குறித்த பாடசாலைக்கு புதிய அதிபர் சென்றிருந்த போது, இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியரினால் புதிய அதிபருக்கு இடையூறு விளைவிக்கபட்டமையினால், அதிபர் தரம்
இல்லாத ஆசிரியரை பாடசாலையை விட்டு வெளியேறுமாறும் புதிய அதிபரை
பாடசாலையை பொறுப்பேற்குமாறும் வலியுறுத்தி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.
புதிய அதிபரை தனது கடமைகளை பொறுப்பேற்றகவிடாது குறித்த ஆசிரியர்
பாடசாலையை விட்டு வெளியேற முயற்சித்த போது பெற்றோர்கள் குறித்த ஆசிரியரை
சுற்றி வளைத்தனர். சம்பவம் தொடர்பில் அறிந்து, தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்திற்கு
சென்ற கோட்டம் ழூன்றுக்கு பொறுப்பான கோட்டகல்வி பணிப்பாளர் சிவக்குமார், பெற்றோர்களோடு கலந்துரையாடிய பின்னர் கோட்டகல்வி பணிப்பாளர்
முன்னிலையில் புதிய அதிபர் கடமைகளை பொறுப்பேற்றமை குறிப்பிடதக்கது.
-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-