27.8 C
Jaffna
December 28, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

போராட்டத்தை அழிக்க ஒரு கருவியாகவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம்: மொட்டு அமைச்சர் சனத் நிஷாந்த!

மக்கள் போராட்டத்தை அழிப்பதற்கான ஒரு கருவியாகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச ஆதரவு கலைஞர் இராஜ் வீரரத்னவுக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலில் இதனை தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் உள்ள ‘கொட்டகோஹோம்’ தளத்தில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கிய குண்டர் கும்பலை வழிநடத்தியதற்காக  நிஷாந்த வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார்.

இந்த நேர்காணலில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, ​​விக்கிரமசிங்க பொது எதிர்ப்பு இயக்கமான ‘அரகலய’க்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்’ என்றார்.

“ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக நாங்கள் அவரை அழைத்து வந்தோம். ‘அறகலய’ மக்கள் இயக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. ‘அரகலய’ மீது தாக்குதல் நடத்தவே அவர் நியமிக்கப்பட்டார்” என சனத் நிஷாந்த தெரிவித்தார்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரணில் விக்ரமசிங்கவை எவ்வாறு நியமித்தார்கள் என வினவிய போது, இராஜாங்க அமைச்சர் விக்ரமசிங்கவை தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதத்துடன் ஒப்பிட்டார்.

“ஒரு நபர் ஒரு வெடிமருந்து அல்லது துப்பாக்கியை வைத்திருப்பார், அதை பராமரிப்பதற்காக வைத்திருப்பதில்லை. அவசரகாலத்தில் அதைப் பயன்படுத்துவதற்காகவே வைத்திப்பர். அதைத்தான் ரணில் விக்கிரமசிங்கவுடன் செய்தோம். ‘அறகலய’ வை அழிக்க அவர் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டார்,” என்று அவர் விளக்கினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

Pagetamil

சுனாமி 20 வது ஆண்டு: இன்று தேசிய பாதுகாப்பு தினம்!

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

Leave a Comment