தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிற கட்சிகள் இணைப்பதை பற்றி இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்படவில்லையென்பதை இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்வதென கட்சியின் அரசியல் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வந்தது.
இது தமிழ் தரப்பின் ஒற்றுமைக்கு எதிரான தரப்பின் பிரச்சாரம் என பலரும் சுட்டிக்காட்டி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக, கூட்டத்தில் பேசப்பட்ட விபரங்களை மாவை சேனாதிராசா வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்தியகுழுவிலும், பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களின் கூட்டத்திலுமே இறுதி முடிவெடுக்கப்படும் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.



