வீட்டு பொருட்களை விற்று போதைப்பொருள் பாவனை: மகனை பொலிசாரிடம் ஒப்படைத்த தாயார்!

Date:

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் போதைப்பொருளுக்கு அடிமையான மகனை, தாயாரே பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

தந்தை இல்லாத நிலையில், தாயாரே குடும்ப பாரத்தை சுமந்து, மகனை சிரமத்தின் மத்தியில் வளர்த்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக மகன், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணமில்லாத நிலையில், வீட்டிலிருந்த பொருட்களை விற்பனை செய்தும், அடமானம் வைத்தம் போதைப்பொருள் வாங்கியுள்ளார்.

தாயாரின் மோதிரத்தை தருமாறு இளைஞன் வற்புறுத்த தொடங்கிய நிலையிலேயே, தாயார் பொலிசாரிற்கு அறிவித்து, இளைஞனை கையளித்துள்ளார்.

இளைஞன் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவர் போதைப்பொருள் பாவிப்பது உறுதியானது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச சமாதான அமைப்பின் விசேட விருது: 100 பேரில் ஒருவராக இலங்கையர் கௌரவிப்பு

சர்வதேச சமாதான அமைப்பினால் உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 முக்கிய...

கொழும்புப்பிட்டி ஜும்மாப் பள்ளிவாசலில் இராணுவ ஆண்டுவிழா ஆசீர்வாத நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு, நாட்டின் அமைதிக்கும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பு...

2,190 மில்லிகிராம் ஹெரோயினுடன் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது!

அம்பாறை பொலிஸ் தலைமையகத்தின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்