பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இளைஞனை கைது செய்ய பொலிசார் சென்ற போது, தப்பியோட முயன்ற இளைஞன், மேல் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கம்பளை பொத்தலப்பிட்டியவில் இந்த சம்பவம் நடந்தது.
நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 22 வயதான இளைஞன் ஒருவர், வீடொன்றில் பதுங்கியிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய சென்ற போது, பொலிசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.
இதன்போது, மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்தவரை, பொலிசார் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தலையில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.




