முன்னாள் போப் 16ஆம் பெனடிக்ட் காலமானார்!

Date:

முன்னாள் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் வத்திக்கனிலுள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் (Mater Ecclesiae Monastery) இன்று (31) காலமானார்.

ரோமிலுள்ள கத்தோலிக்கத் திருத்தந்தையின் ஆட்சிப்பீடப் பேச்சாளர், அந்தத் தகவலை வெளியிட்டார்.

போப் 16ஆம் பெனடிக்ட், காலை மணி 9.34க்குக் காலமானதாக அவர் குறிப்பிட்டார்.

கத்தோலிக்க திருச்சபை வரலாற்றில் கடந்த 600 ஆண்டுகளில் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற முதலாவது போப்பாண்டவர் அவராவார். 2013ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் வாழ்ந்து வந்தார்.

“போப் எமரிட்டஸ் XVI பெனடிக்ட் இன்று காலை 9:34 மணிக்கு வத்திக்கானில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலதிக தகவல்கள் கூடிய விரைவில் வழங்கப்படும்” என பேச்சாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவரது உடல் திங்கள்கிழமை முதல் செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் வைக்கப்படும் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.

பதவியிலுள்ள போப் காலமானால், அவருக்கான சம்பிரதாய இறுதிச்சடங்கு விபரம் பொதுவாக அறியப்பட்டதுதான். ஆனால் முன்னாள் போப்பாண்டவரிற்கு என்ன விதமான இறுதிச்சடங்கு செய்யப்படும் என்பது பொதுவில் அறியப்படவில்லை

இந்த வார தொடக்கத்தில், போப் பிரான்சிஸ் தனது வாராந்திர பொதுக் கூட்டத்தின் போது முன்னாள் போப் “மிகவும் உடல்நிலை சரியில்லாமல்” இருப்பதாகவும், மக்கள் அவருக்காக ஜெபிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

திருச்சபையில் உள்ள கன்சர்வேடிவ்கள் முன்னாள் போப் தொடர்பில் மிகவும் சாதகமான அணுகுமுறையை கொண்டிருந்த போதும், சில தீவிர பாரம்பரியவாதிகள் பிரான்சிஸை ஒரு முறையான போப்பாண்டவராக ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர்.

LGBTQ+ சமூகத்தின் உறுப்பினர்கள் மற்றும் விவாகரத்து செய்து தேவாலயத்திற்கு வெளியே மறுமணம் செய்துகொண்ட கத்தோலிக்கர்கள் ஆகியோர் தொடர்பில் பிரான்சிஸ் கொண்டிருந்த மிகவும் வரவேற்கும் அணுகுமுறையை அவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த இரண்டு தரப்பினர் பாரம்பரிய மதிப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகக் கூறினர்.

spot_imgspot_img

More like this
Related

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே

உண்ணாவிரதத்தை முடித்தார் சுரேஷ் சல்லே உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின்...

காதார விழிப்புணர்வில் மதத் தலைவர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்: பிராந்திய பணிப்பாளர் தெரிவிப்பு

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும்,...

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்