25.8 C
Jaffna
January 9, 2025
Pagetamil
கிழக்கு

திருகோணமலையில் புதையல் தோண்ட முற்பட்ட விமானப்படையினர், ஆசிரியர் கைது!

நிலாவெளி பிரதேசத்திற்கு புதையல் அகழ்வதற்காக வந்த மூன்று விமானப்படை வீரர்கள் மற்றும் ஆசிரியர் உட்பட ஒன்பது பேர் கொண்ட குழுவை நிலாவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நிலாவெளி கடற்கரைக்கு புதையல் தேடுவதற்காக குழுவொன்று வந்துள்ளதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் குழுவினர்  வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேன் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த ஆசிரியர் ஹல்துமுல்ல சொரகுனே பகுதியைச் சேர்ந்தவர். அவருக்கு 28 வயது என்று போலீசார் தெரிவித்தனர். 40 மற்றும் 38 வயதுக்குட்பட்ட மூன்று விமானப் படையினரும் மொரவெவ, உஹன மற்றும் அனுராதபுரம் விமானப்படைத் தளங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய சந்தேகநபர்கள் பண்டாரவளை, கதிர்காமம் மற்றும் பிபிலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குகதாசன் கண்டனம்

east tamil

திருகோணமலையின் புதிய அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர் நியமனம்

east tamil

தொடரும் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் சிறப்பு வேலைத்திட்டம்

east tamil

அம்பாறையில் நல்லிணக்கத்தின் தேசிய தரவுகளைப் பகிரும் பயிற்சி பட்டறை

east tamil

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலையத்தின் புதிய நிர்வாக குழு தெரிவு

east tamil

Leave a Comment