நாய் விவகாரத்தில் ரூ.1.5 பில்லியன் நட்டஈடு கோரும் ஆஷு மாரசிங்க!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க, ஊடகவியலாளர் சந்திப்பின் போது தம்மை அவதூறாகப் பேசியதாகக் கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ கரந்தனவிடம் முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் ஒரு பில்லியன் ரூபா நஷ்டஈடாக கோரி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா ஆகிய இருவரையும் 14 நாட்களுக்குள் நஷ்டஈடாக 1.5 பில்லியன் ரூபாவை செலுத்துமாறு வலியுறுத்தி சட்டத்தரணி மலின் ராஜபக்ஷ ஊடாக இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்குள் பணத்தை செலுத்தாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

பேராசிரியர் ஆஷு மாரசிங்க நாயொன்றை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காணொளிப் பதிவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களுக்கு வெளியிட்டதை அடுத்து அது வைரலாகியுள்ளது.

ஊடகங்களுக்குக் கூறப்படும் அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், அது உண்மையைத் திரித்துக் கூறுவதாகவும் தனது கட்சிக்காரரால் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக சட்டத்தரணி மலின் ராஜபக்ச தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்