ஐஸ் போதைப்பொருளை விநியோகித்த 22 வயதான இளைஞன் கைது

Date:

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து வியாழக்கிழமை(29) இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி விவேகானந்த பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்லடி பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன் சந்தேக நபர் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிராம் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான பிரியங்கர ( 75812) பிரசன்ன (90669) நிமேஸ்(90699) பியுமகே ( 94143) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் காத்தான்குடி பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

சிஐடியினர் அநுராதபுரம் சென்றால் முழு திருடர்களையும் ஒரே மேடையில் பிடித்திருக்கலாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற பொதுஜன பெரமுன தலைமையிலான பேரணியையும் ராஜபக்ச குடும்பத்தையும் விமர்சித்த...

வடக்கு, கிழக்கில் மழைக்கு வாய்ப்பு

எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலையில் இடியுடன் கூடிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்