ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் நடிகை ரியா குமாரி என்கிற இஷா அய்லா (32). இவரது கணவர் பிரகாஷ் குமார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
ரியா குமாரி நேற்று முன்தினம் தனது கணவர் பிரகாஷ் மற்றும் குழந்தையுடன் கொல்கத்தாவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். இந்நிலையில் மேற்கு வங்கத்தின் உலுபெரியா நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ரியா தலையில் காயத்துடன் கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
ஹவுரா மாவட்டம் பக்னான் என்ற இடத்தில் காரை நிறுத்தியபோது 3 பேர் தன்னிடம் உள்ள பணப் பையை பறிக்க முயன்றதாவும் ரியா அதை தடுக்க முயன்றபோது அவரை அந்த நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டதாகவும் பிரகாஷ் கூறினார்.
இதுகுறித்து ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பிரகாஷிடம் போலீஸார் நேற்று முன்தினம் இரவு நீண்ட விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.