இலங்கையை பூர்வீகமாக கொண்ட அமெரிக்க தமிழ் கோடீஸ்வரர் ராஜ் ராஜரத்தினம் தற்போது இலங்கை வந்துள்ளார்.
Galleon Group Hedge Fund நிறுவனர் ராஜ் ராஜரத்தினம், அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றான ஹெட்ஜ்-நிதி மோசடியின் மூளையாக செயல்பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டார்.
Galleon Group Hedge நிதியத்தின் நிறுவனரான ராஜ் ராஜரத்தினம் இலங்கையில் பிறந்தவர். 2009 இல் உள் வர்த்தகப் பத்திர மோசடிகளில் குற்றவியல் குற்றங்களுக்காக FBI ஆல் கைது செய்யப்பட்டார்.
தமிழர் புனர்வாழ்வு அமைப்புக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் கொடுத்ததாகவும் ராஜரத்தினம் குற்றம் சாட்டப்பட்டார். நவம்பர் 2007 இல் அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தால் சொத்துக்கள் முடக்கப்பட்டன.
2006 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அதிகாரம் இன்றி கிருலப்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டட் வங்கிக் கிளையில் வைப்பிலிடப்பட்ட சர்ச்சைக்குரிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடன் ராஜரத்தினம் தொடர்புபட்டிருந்தார்.
ராஜரத்தினம் சிறைச்சாலையிலும், பின்னர் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் பெயர் இந்த சட்டவிரோத கொடுக்கல் வாங்கலில் இணைக்கப்பட்டிருந்த போதிலும், 2015 ஆம் ஆண்டு, பரிவர்த்தனை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி பணமோசடி செய்த குற்றச்சாட்டில் கருணாநாயக்க நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
ராஜ் ராஜரத்தினம் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் சென்று பார்வையிட்டிருந்தார்.




