Pagetamil
கிழக்கு

2 வயது சிறுமிக்கு ஆபாச வீடியோ காண்பித்து துஷ்பிரயோகம் செய்ய அண்ணன்!

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் 2 வயது 8 மாத பெண் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்துள்ளதுடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை விட்டுவந்த நிலையில் அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையும் தன்னுடன் இளைஞன் இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று கைது செய்தனர்

இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்டவரை நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெருகலில் மீண்டும் பௌத்தமயமாக்கல், அருணின் பதில் என்ன?

east tamil

பெற்றோலிய துறையை மேம்படுத்த அருண் முயற்சி

east tamil

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

east tamil

மணல் கடத்தியவர் கைது

Pagetamil

ரோட்டரி மாவட்ட ஆளுநர் திருகோணமலைக்கு விஜயம்

east tamil

Leave a Comment