நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி, அனைத்து வழக்குகளிலும் பிணை வழங்கப்பட்டதன் காரணமாக சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அனைத்து வழக்குகள் தொடர்பிலும் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலையில் தொலைபேசி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மாவட்ட நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1