ஈரானிற்கு அதி நவீன விமானங்களை வழங்கும் ரஷ்யா!

Date:

ஈரானுக்கு 24 Sukhoi Su-35 போர் விமானங்களை “மிக விரைவில்” ரஷ்யா வழங்கும் என்று இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனல் i24NEWS தெரிவித்துள்ளது.

பெயரிடப்படாத மேற்கத்திய உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் உண்மையானால், ஈரானின் விமானப்படை  உயர்தர இராணுவ விமானங்கள் இல்லாத குறையை ஓரளவு சரி செய்யும்.

“விற்பனை செய்யப்படாத உபரிக்காக ரஷ்யர்கள் வாங்குபவர்களைத் தேடிக்கொண்டிருந்தனர், மேலும் ஈரான் அந்த விமானங்களை மிக விரைவில் பெறுவார்கள் என்று தெரிகிறது” என்று அறிக்கை கூறுகிறது.

ஈரானிய விமானிகளுக்கு ஏற்கனவே Sukhoi Su-35 போர் விமானங்களை ஓட்ட பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக i24NEWS தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கை குறித்து ஈரானோ அல்லது ரஷ்யவோ கருத்து தெரிவிக்கவில்லை.

ஈரான் அmண்மையில் ரஷ்யாவிற்கு ட்ரோன்களை வழங்கியது. உக்ரைனில் வான் பாதுகாப்பை ஓரளவு சரி செய்து விட்டதாக மேற்கு நம்பியிருந்த சமயத்தில், அவர்களிற்கு பெருத்த தலையிடியாக இந்த ட்ரோன்கள் மாறின.

டிசம்பர் 19 அன்று, ஜனாதிபதி Volodymyr Zelensky, ரஷ்யா சமீபத்தில் ஈரானில் இருந்து 250 புதிய ஷாஹெட்-136 ட்ரோன்களைப் பெற்றதாகக் கூறினார். மொத்தமாக 1700 வரையான ட்ரோன்கள் வாங்கப்பட்டதாகவும், 550 அளவிலானவை தாக்குதலிற்காக பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறியிருந்தார்.

ஆளில்லா விமானங்களைத் தவிர, தரையிலிருந்து மேற்பரப்புக்கு ஏவப்படும் ஏவுகணைகளையும் ஈரானிடமிருந்து  ரஷ்யா பெற முயல்கிறது. மலிவு விலையிலான இந்த ஆயுதங்கள் மேற்கத்தைய மூலோபாயத்திற்கு தொந்தரவாக அமைந்துள்ளன.

spot_imgspot_img

More like this
Related

டிசம்பர் 1 முதல் வாகனப் பரிமாற்ற விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும்!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) டிசம்பர் 1 முதல் வாகன உரிமை...

முன்னாள் நீதிபதி திலின கமகே சேவையிலிருந்து நீக்கம்!

ஒழுங்கு நடவடிக்கை விசாரணையில் தன்மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத்...

அமெரிக்க, உலகச்சந்தைக்கு டீசல் விநியோகிக்க ரஷ்யாவுக்கு ட்ரம்ப் அனுமதி!

உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா பல ஆண்டுகளாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்