வடமராட்சி இளைஞர்களின் முன்னுதாரண உதவி!

Date:

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சிறு பிள்ளையொன்று தவறவிட்ட மோதிரத்தை இரண்டு இளைஞர்கள் மீட்டுக் கொடுத்துள்ளனர்.

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று வழிபாட்டிற்கு வந்திருந்த குடும்பமொன்றின் சிறு பிள்ளையொருவர், ஆலய வீதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, கையில் அணிந்திருந்த பெறுமதியான தங்க மோதிரத்தை தவறவிட்டிருந்தார்.

சற்று தாமதமாக விடயத்தை அறிந்த குடும்பத்தினர் அதை தேட ஆரம்பித்தனர்.

இதை அவதானித்த இரண்டு இளைஞர்களும், அவர்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர். சில மணித்தியால தேடுதலின் பின்னர், அந்த இளைஞர்களில் ஒருவர் மோதிரத்தை கண்டெடுத்தார்.

குடும்பத்தினர் வழங்கிய அன்பளிப்பையும் அந்த இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்தவர்கள் இளைஞர்களை வெகுவாக பாராட்டினர்.

 

spot_imgspot_img

More like this
Related

‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்

அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது...

மீன் விற்பனையில் அதிர்ச்சி மோசடி: எடையை அதிகரிக்க மணல் கலப்படம்

சந்தைகளிலும் வீதியோரங்களிலும் மீன் விற்பனையின் போது, மீன்களின் எடையைச் செயற்கையாக அதிகரிப்பதற்காகவும்...

அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர்களுக்கு மேலங்கிகள் அன்பளிப்பு

அக்கரைப்பற்று மாநகர சபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலங்கிகள் வழங்கும் நிகழ்வு (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்