மண்மேடு சரிந்து விழுந்ததில் சகோதரன், சகோதரி பலி

Date:

அலவத்துகுட, துனுவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கணபதி தோட்டம் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரியும் சகோதரனும் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலையில் வீட்டின் மீது மண்மோடு சரிந்து விழுந்த போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சிக்குண்டனர். பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது தாய், தந்தை, இரண்டு சிறுமிகள் மற்றும் சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டு, ஜம்புகஸ்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 18 வயது பெண்ணும், அவரது 16 வயது சகோதரனும் உயிரிழந்துள்ளனர்.

12 வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

குழந்தைகள் வாழும் இடத்தில் மதுபானசாலையா?” – புங்குடுதீவு மாணவர்கள் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் ஏற்பாட்டில்...

நல்லூரில் தியாக தீபம் தொடர் போராட்டம் இன்று இறுதி நாள் முன்னெடுப்பு!

தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அச்சிலையை மீண்டும் அதே இடத்தில்...

இனவாதம், மதவாதத்தை தூண்டி அரசியல் மாற்றத்துக்கு சதி – கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்