தமிழ் கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படுவதானால், முதலில் இலங்கை தமிழ் அரசு கட்சி ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டுமென தமிழ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் இன்று யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தின. இதன் போது, தமிழ் அரசு கட்சியை ஒரு நிலைப்பாட்டிற்கு வருமாறு ஏனைய கட்சிகள் வலியுறுத்தின.
நல்லூரிலுள்ள க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. க.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பிற்கு முன்னதாக செல்வம் அடைக்கலநாதனும், த.சித்தார்த்தனும் தனித்து மாவை சேனாதிராசாவின் வீட்டிற்கு சென்று சந்திப்பில் ஈடுபட்டனர். இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக தம்மிடம் கூறுமாறு, பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இருவரும் கேட்டுள்ளனர்.
உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது தமிழ் அரசு கட்சியின் தீர்மானமல்ல என தெரிவித்த மாவை சேனாதிராசா, அடுத்த வாரம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதை ஆராய்ந்து இறுதி முடிவை தருவதாக கூறினார்.
தமிழ் தேசிய கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு குந்தகம் வரும் எந்த நிலைப்பாட்டையும், பொறுப்புள்ள கட்சியென்ற அடிப்படையில் எடுக்க மாட்டோம் என மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.
இதன் பின்னர் விக்கேஸ்வரனின் வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போதும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாட்டைதெளிவுபடுத்துமாறு ஏனைய கட்சிகள் கோரின. கட்சியின் செயற்குழுவை கூட்டி, முடிவை அறிவிப்பதாக மாவை தெரிவித்தார்.
அத்துடன், தேர்தலில் தனித்து போட்டியிட்ட பின், இனப்பிர்ச்சினை விவகாரத்தில் சேர்ந்து செயற்படுவதில் சிக்கல்கள் வரலாம். தேர்தலில் மோதிக்கொண்ட அடிமட்ட தொண்டர்களை ஏனைய விடயங்களில் ஒன்றிணைப்பதில் சிரமங்கள் வரலாமென்பதால். உள்ளூராட்சி தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க யோசழைன முச