முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஐயன்கன்குளம் காட்டுப் பகுதியில் முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.
கால்நடை மேய்ப்பதற்காக சென்றலர்கள் சிசுவின் எச்சங்களை அவதானித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கினர்.
நேற்று பொலிசார் சம்பவ இடத்திற் சென்றனர்.
முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிபதி நேற்று சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
முதிர்ச்சி பெறாத சிசு ஒன்றின் எச்சங்களே அவையென்றும், சட்டவிரோத கருக்கலைப்பு ஒன்றின் மூலம் பிரசவிக்கப்பட்ட சிசுவின் எச்சங்களாக இருக்கலாம் எனவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
சிசுவின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் துணியால் சுற்றப்பட்டிருந்நது.
சம்பவம் தொடர்பில் ஐயன்கன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1