Pagetamil
உலகம்

அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயல்

அமெரிக்காவை கடுமையாக தாக்கிய “பாம்ப் சூறாவளி” பனிப்புயலால் 1.5 மில்லயன் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடும்பனி காரணமாக நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பனிபுயல் காரணமாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. வழக்கமாக இயல்பான வெப்பநிலை நிலவும் தென்பகுதி உட்பட நாடுமுழுவதும் வீசிவரும் கடுங்குளிர் காரணமாக வெந்நீர் கூட விரைவில் பனிக்கட்டியாக விடும் சூழல் நிலவி வருகிறது.

தேசிய வானிலை சேவை மையத்தின கருத்துபடி, வெப்பநிலை -55 ஃபாரன்ஹீட்டாக (-48 டிகிரி செல்சியஸ்) இருந்தது.

பனிப்பொழிவு பாதிப்பு குறித்து நியூயோர்கின் ஹம்பர்க் நகரைச் சேர்ந்த 39 வயதான ஜெனிஃபர் ஓர்லான்டோ கூறும்போது, “எங்களால் தெருவில் எதையும் பார்க்க முடியவில்லை. நாங்கள் எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே பதுங்கியிருந்தோம். தெருவில் நின்ற வாகனத்தின் மீது மின்கம்பம் சரிந்து விழுந்ததால் நான்கு மணிநேரம் மின்சாரம் இல்லாமல் தவித்தோம்” என்றார். இதேபோல நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

ஆசிரியையும் தன்வார்வலருமான ரோஸா ஃபால்கான் கூறுகையில், “மெக்சிகோவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் டெக்சாஸின் எல் பாசோ நகரின் தேவாலங்கள் பள்ளிக்கூடங்கள், நகர மையங்களில் தஞ்சமைடந்துள்ளனர். குடியேற்ற அதிகாரிகளுக்கு பயந்து இன்னும் பலர் -15 ஃபாரன்ஹிட் குளிர் நிலவும் தெருவிலேயே தஞ்சமடைந்துள்ளனர்” என்றார்.

சிகாகோ நகரில் வீடற்றவர்களுக்கு உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், “நாங்கள் அங்கிகள், தொப்பிகள், கையுறைகள், சூடேற்றும் உபகரணங்கள், போர்வைகள், தூங்கும் பைகள் உள்ளிட்ட குளிர்கால உபகரணங்களை வழங்குகிறோம் என்றனர்.

சால்வேசன் ஆர்மியின் சிகாகோ பகுதி மேஜர் கால்ப் சென் கூறுகையில், வீடற்றவர்களுக்கு தங்குவதற்காக எங்கள் அமைப்பு தங்களின் இடங்களை திறந்து விட்டுள்ளது. இங்கு தங்கியுள்ளவர்களில் பலர் இந்த ஆண்டுதான் வீடற்றவர்களாக மாறியுள்ளனர். முதல் முறையாக தங்குவதற்கு வீடு இல்லாததால் அவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

விமான சேவை பாதிப்பு:

வடக்கு மற்றும் தெற்கு டகோடா, ஓக்லஹோமா, லோவா மற்றும் பலபகுதிகளில் உள்ள போக்குவரத்து துறைகள், வெண்பனி சூழ்ந்த சாலைகளால் எதிரில் வரும் எதனையும் பார்க்க முடியாத நிலை உள்ளதால் மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தின. விடுமுறை கொண்டாட்டங்களுக்காக நாடு தயாராகி வரும் வேளையிலும் கூட சாலை பயணத்தை தவிர்க்கும் படி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

நியூயோர்க் நகர கவர்னர், காதி ஹோசூல்,”இது நாடு தழுவிய ஆபத்து. சாலைகள் அனைத்தும் பனிச்சறுக்கு பாதை போல உள்ளன. உங்களுடைய வானங்கள் அதில் பயணம் செய்ய முடியாது” என்றார்

விமான சேவைகள் குறித்து தகவல் அளிக்கும் “ஃப்ளைட்அவர்” என்னும் இணையதளத்தின் படி, அமெரிக்காவில், 5,000 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7,600 விமானங்கள் தாமதமாக சென்றுள்ளன.

வெள்ளிக்கிழமை மதியத்திற்கு பின்னர் 24 மணி நேரத்திற்குள் காற்றுழுத்தம் விரைவாக குறைந்ததைத் தொடர்ந்து பனிப்புயல் “பாம்ப் சூறாவளி” என்ற நிலையை அடைந்தது. இது கடும் மழை அல்லது பனி பொழிவை உண்டாக்கும். கரையோரங்களில் வெள்ளம் ஏற்படலாம். அதே நேத்தில் கடும் புயல் போல பெருங்காற்றும் வீசலாம்.

உறைபனி நிலை தேசிய வானிலை சேவை மையத்தின் முன்ணணி வானிலை அறிவிப்பாளர், ரிச் மலியாவ்கோ,” ஒரே இரவில் காற்று திடீரென – 60 ஃபாரன்ஹிட்க்கும் குறைவாக இறங்கியகியது. இது மிகவும் ஆபத்தான நிலை. இந்த ஆபத்தான குளிர் நிலையில் நீங்கள் குளிரிலிருந்து பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஐந்து நிமிடத்தில் உங்கள் தோல் உறைந்துவிடும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆப்கானிஸ்தானுக்குள் திடீர் வான் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்

Pagetamil

பறவை மோதியதால் விபரீதமா?: பயணிகள் விமானம் விபத்து; ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

ஜனாதிபதியாக இருந்தால்தான் கணவன்: சிரியாவிலிருந்து தப்பியோடிய ஆசாத்திடமிருந்து விவாகரத்து கோரும் மனைவி!

Pagetamil

உகண்டாவை உலுக்கும் டிங்கா டிங்கா வைரஸ்: இந்த வைரஸ் தொற்றினால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டேயிருப்பீர்கள்!

Pagetamil

நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கம்!

east tamil

Leave a Comment