ரக்வான பொலிஸ் பிரிவில் 15 வயதான பாடசாலை மாணவியை, முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று, ஆட்களற்ற வீட்டில் மது அருந்த வைத்து, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கிய காதலனை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரக்வான பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.
சந்தேக நபர் சிறுமியை வன்புணர்வு செய்த பின்னர், அவனது இரண்டு நண்பர்களை அழைத்து, அவர்களிற்கும் சிறுமியை விருந்தாக்கியுள்ளார்.
மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இருவரை கைது செய்ய ரக்வான பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதலில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய சந்தேக நபருடன் இந்த மாணவி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற 24 வயதான நபர், முதலில் சிறுமியை மது குடிக்க வற்புறுத்திய பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் அவனது இரண்டு நண்பர்கள் சிறுமியை பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.