ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) சமர்ப்பித்த குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏழு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாநகர சபையில் இன்று கூடிய சபை உறுப்பினர்களின் கூட்டத்தின் போது குருநாகல் மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண உத்தேச வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.
குருநாகல் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டம் எதிராக 14 வாக்குகளாலும் ஆதரவாக 07 வாக்குகளாலும் தோற்கடிக்கப்பட்டது.




