26 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

தினேஷ் ஷாப்டர் படுகொலை: 4 தொலைபேசி இலக்கங்களின் பகுப்பாய்வு அறிக்கைக்கு உத்தரவு!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் படுகொலை விசாரணைகள் தொடர்பில் நான்கு தொலைபேசிகளின் பகுப்பாய்வு அறிக்கைகளை பெற்று நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்குமாறு பொரளை பொலிஸாருக்கு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இன்று (20) உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான நான்கு தொலைபேசி இலக்கங்களின் பகுப்பாய்வு அறிக்கைகளுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் மனைவி மற்றும் அவர் பணியாற்றிய நிறுவனத்தின் ஊழியர்கள் இருவரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு உண்மைகளை அறிவிக்குமாறு பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

east tamil

Leave a Comment