எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச தீர்மானித்துள்ளது.
அதற்கமைய நாளை (21) முதல் இந்த விலைக்குறைப்பு அமுலுக்கு வரும்.
ஒரு கிலோ பெரிய வெங்காயம், ரூ.5 குறைக்கப்பட்டு, ரூ.185 இற்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு கிலோ சிவப்பு பருப்பு ரூ.7 குறைக்கப்பட்டு, ரூ.378 இற்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு கிலோ செத்தல் மிளகாய் ரூ.15 குறைக்கப்பட்டு, ரூ.1780 இற்கு விற்பனை செய்யப்படும்.
ஒரு கிலோ தாய்லாந்து நெத்தலி ரூ.50 குறைக்கப்பட்டு, ரூ. 1,100 இற்கு விற்பனை செய்யப்படும்.
உள்ளூர் டின் மீன் ரூ.10 குறைக்கப்பட்டு, ரூ 480 இற்கு விற்பனை செய்யப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1