யாழ். சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள மியான்மார் அகதிகளுக்கு சுமார் 19 இலட்சம் பெறுமதியான அவசர தேவைப் பொருட்களை “மெசிடோ” நிறுவனத்தின் இயக்குனர் யாட்ஸ்சன் பிகிறாடோ தலைமையில் நிறுவனப்பிரதிநிகள் இன்று செவ்வாய்க்கிழமை யாழ். சிறைச்சாலையில் வைத்து வழங்கினர்.
அண்மையில் வெற்றிலைக்கேணி கடற்பரப்பை ஆரம்பித்த கடலில் தத்தளித்த படகிலிருந்து சுமார் 105 மியான்மர் அகதிகள் கடற் படையினரால் மீட்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் அவர்களை யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், மருந்து பொருட்கள், பால்மா வகைகள், ஆடைகள், சவக்கார வகைகள் உட்பட அவசர தேவை பொருட்களை குறித்த நிறுவனம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1