நாட்டின் நிலக்கரி இருப்பு இம்மாதம் 31ஆம் திகதி முடிவடைவதையடுத்து, நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்குவதை நிறுத்த வேண்டிய நிலைமையேற்பட்டு, நாட்டில் 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படலாம் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் மின்சார விநியோகத்தில் 45 சதவீதத்தை நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் பூர்த்தி செய்வதால், மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தால், 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என வீரரத்ன கூறினார்.
நீர் மின் நிலையங்களுக்கான நீர்மட்டம் 75 சதவீதமாக குறைந்துள்ளதால், அடுத்த சில மாதங்களில் நீர்மின்சாரம் அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டுமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது என்றார்.
நாடு ஸ்தம்பித்துவிடும் என எச்சரித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1