25.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள் விளையாட்டு

உலககோப்பை இறுதியாட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி சம்பியனானது அர்ஜெண்டினா!

உலககோப்பை இறுதியாட்டத்தில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா சம்பியனானது.

கட்டார் லுசைல் மைதானத்தில் இன்று நடந்த மிகப்பரபரப்பான ஆட்டத்தில் 4-2 என பெனால்ட்டி சூட்டில் ஆர்ஜென்டினா வெற்றியீட்டியது.

இந்த போட்டியின் முதல் 90 நிமிடத்திலேயே அர்ஜெண்டினா வெற்றியீட்டி விட்டது என எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், பிரான்ஸின் கைலியன் எம்பாவே 97 விநாடி இடைவெளிக்குள் அடுத்தடுத்து அடித்த 2 கோல்கள் போட்டியை மேலதிக நேரம் வரை கொண்டு சென்றது.

மேலதிக நேரத்தின் முற்பாதியிலும் அர்ஜெண்டீனா ஆதிகம் செலுத்தி கோலடித்தது. இம்முறையில் பிற்பாதியில் பிரான்ஸ் கோலடிக்க, வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி சூட்டுக்கு போட்டி சென்றது.

இன்றைய போட்டியின் ஆரம்பத்திலிருந்தே அர்ஜெண்டினா அணியின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதேசமயம் பிரான்ஸ் அணி ரிதம் கிடைக்காமல் திண்டாடியது. என்றாலும், அந்த அணிக்கு அதிர்ஸ்டமும் இருந்தது. அதனால் ஆட்டம் பெனால்ட்டி சூட் வரை சென்றது.

இன்றைய ஆட்டத்தில் முதல் கோலை பெனால்ட்டியில் ஆர்ஜென்டினா பெற்றது.

பிரான்ஸ் கோல் பொக்ஸிற்கு அல்வாரெஸால் பந்தை கொண்டு சென்ற போது, பிரான்ஸ் டிபண்டர் அவரை கீழே தள்ள, பனால்ட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. 23வது நிமிடத்தில் மெஸ்ஸி அதனை கோலாக்கினார். 1-0 என அர்ஜெண்டினா முன்னிலை வகித்தது.

36வது நிமிடத்தில் மெஸ்ஸி கொடுத்த பந்தை டி மரியா கோலாக்கினார். 2-0.

இதன்பின் அர்ஜெண்டினா அனேகமாக தற்காப்பு ஆட்டத்தையே ஆடியது. ஆனாலும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் திடீர் திடீரென தாக்குதல் ஆட்டம் ஆடியது.

80வது நிமிடம் வரை அர்ஜெண்டினா அணியின் தாக்குதல் ஆட்டமே ஆபத்தானதாக அமைந்தது. அதேவேளை, பலமான தற்காப்பையும் அமைத்திருந்தது.

ஆனால் 97 வினாடி இடைவெளியில் காட்சி மாறியது.

பிரான்ஸின் கைலியன் எம்பாவே 80, 81வது நிமிடங்களில் கோலடித்தார். கோலோ முவானி பந்துடன் அர்ஜெண்டினா பொக்ஸ்க்குள் நுழைய, அங்கிருந்த அர்ஜெண்டினா வீரர் முரட்டுத்தனமாக அவரை தடுக்க, கிடைத்த பெனால்டியை 80 நிமிடத்தில் எம்பாவே முதலாவது கோலாக்கினார்.

அடுத்த நிமிடமே நம்ப முடியாத மற்றொரு கோலடித்து பிரான்ஸின் உலகக்கிண்ண கனவை உயிர்ப்பித்தார்.

90 நிமிடங்கள், +9 நிமிடங்கள் என ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 2-2 என சமநிலையில் இருந்தன.

இதையடுத்து கூடுதல் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் 108வது நிமிடத்தில் மெஸ்ஸி கோலடித்தார்.

118வது நிமிடத்தில், அர்ஜெண்டினா வீரரின் கையில் பந்து பட்டதால், பிரான்ஸிற்கு பெனால்ட்டி வழங்கப்பட்டது. இது சர்ச்சைக்குரிய ஒரு தீர்மானமாக இருக்கும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி எம்பாவே 3வது கோலடித்தார்.

ஆட்டம் 3-3.

120′ + 5 மேலதிக நேரத்திலும், ஆட்டம் சமனிலையில் முடிந்ததையடுத்து,  பெனால்ட்டி சூட் அவுட்டிற்கு சென்றது. இதில் 4-2 என அர்ஜண்டினா வெற்றியீட்டி, சம்பியனானது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

தேர்தல் தோல்வியுடன் சங்கு அணியில் குழப்பம்: 3 சிறிய கட்சிகளை வெளியே அனுப்ப முயற்சி!

Pagetamil

2023 உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்களை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி!

Pagetamil

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

UPDATE: காரைதீவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 பேரின் சடலங்களும் மீட்பு!

Pagetamil

Leave a Comment