இலாபம் தருகின்ற ஸ்ரீலங்கா ரெலிகொம் இலங்கை மின்சார சபை நிறுவனங்களை தனியாருக்கும் வெளிநாட்டுக்கு விற்பதற்கு அரசாசங்கம் முயற்சிக்கிறது
என நாடாளுமன்ற உறுப்பினரும் லங்கா சமசமாஜ கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்.எம்.பெரேரா பொருளாதாரத்தை உயர்த்த பல வேலைத்திட்டங்களை செய்தார். ஆனால் தற்போது எதுவுமே இல்லை. இதனால் இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
எம்சிசி,சோபா ஓப்பந்தத்தை செய்ய இரகசியமாக வேலை இடம்பெறுகிறது. அவ்வாறான நிலை ஏற்படுமானால் அமெரிக்க இராணுவம் வந்து நிலைமை மோசமாகும். அவர்களுக்கு எதிராக எதுவும் செய்ய முடியாது.
தோட்டத்தொழிலாளர்களை உரிமையாளர்களாக மாற்றி குறிப்பிட்ட நிலங்களை அவர்களுக்கு வழங்கினால் அவர்கள் முழுமூச்சாக பாடுபட்டு டொலரை பெறலாம். இதனால் தேயிலை இறப்பர் மூலம் பெருமளவு டொலரை பெறமுடியும்.
செவிடன் காதில் ஊதிய சங்குபோல அரசாங்கம் இருக்கிறது. இந்நிலையை மாற்ற வேண்டும். லங்கா சமசமாஜக் கட்சி யாழ்ப்பாணத்தில் சாவி சின்னத்தில் எதிர்வரும் காலத்தில் போட்டியிடவிருக்கின்றது. இனமத பேதமில்லாமல் அனைவரும் வாக்களித்து எம்மை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றார்.