கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் வெற்றி: தோடம்பழமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் பிரிந்து வாக்களிப்பு!

Date:

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை (15) பிற்பகல் 03.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது.

இந்த அமர்வுக்கு மாநகர சபையின் மொத்த உறுப்பினர்கள் 41 பேரில் 35 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.

பட்ஜெட்டை சமர்ப்பித்து மாநகர முதல்வர் உரையாற்றியதைத் தொடர்ந்து உறுப்பினர்களின் கருத்துகளையடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 09 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். 06 உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.

ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 05 உறுப்பினர்கள், சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 04 உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஹெலிகொப்டர் சுயேட்சைக் குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவருமாக 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 03 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவின் 02 உறுப்பினர்களும் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை. இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 04 உறுப்பினர்களும் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து வருகை தந்திருந்தனர்.

-பாரூக் சிஹான்-

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்