கிராம மட்ட அமைப்பினருக்கு, இளையோரை போதைப்பொருள் பாவனைக்கு அகப்படாமல் பாதுகாக்கும் யுத்திகள் தொடர்பிலும் பால்நிலை வன்முறையற்ற சமத்துவமான சந்தோசமான குடும்ப வாழ்வை நோக்கி நகர்த்தும் முகமான முழுநாள் பயிற்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
ஹெல்தி லங்கா நிறுவனம் மற்றும் வடமராட்சி நல்லொழுக்க நிறுவனம் (VOGT) ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய இந்த பயிற்சி நெறியில், ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடமாகாண வேலைத்திட்ட இணைப்பாளர் தேவராசா பிறேமராஜா அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை நெறிப்படுத்தினார்.
இந் நிகழ்வில் VOGT நிறுவன இணைப்பாளர் றோய், சமூக மட்ட அமைப்பினர், இளைஞர் மற்றும் யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1