கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கோடீஸ்வர வர்த்தகரை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு போக்குவரத்து நீதவான் பி. ஜே. பிரபாகரன் இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை கொள்ளுப்பிட்டி பொலிஸில் ஆஜராகுமாறு பிணையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1