25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
உலகம்

‘ஒசாமா பின்லாடன் இறந்து விட்டார்… ஆனால் குஜராத் கசாப்பு கடைக்காரன் மோடி இன்னும் உயிருடன் இருக்கிறார்’: ஐ.நாவில் பாகிஸ்தான் பதிலடி!

“ஒசாமா பின்லாடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத் கசாப்பு கடைக்காரன் மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்” என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ பதிலடி வழங்கியுள்ளார்.

பாகிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்திய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு பதிலடியாகவே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிங் கூட்டம் நேற்று நடந்தது. இதில் டிசம்பர் மாதத்துக்கு தலைமை தாங்கிய இந்தியா 2 முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இதில் ‘சர்வதேச தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை கொள்கைகள் மற்றும் முன்னோக்கிய பாதை’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது.

அப்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பயங்கரவாத செயல்களுக்காக பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார்.

இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் மையப்புள்ளியாகப் பார்க்கிறது. மேலும் தீவிரவாதம் எங்கிருந்து உருவாகிறது என்பதை சர்வதேச சமூகம் தெரிந்து கொண்டுள்ளது.

இரண்டரை ஆண்டுகளாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்த நம் அனைவருக்கும் சற்று மூளை மந்தநிலை ஏற்பட்டிருக்கலாம் ஆனாலும் நம் மூளை பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை மறக்கவில்லை. அதனால் தீவிரவாதத்தை துண்டுபவர்கள் அதனைத் தொடரும் முன் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளட்டும்.

2011ல் அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த ஹிலாரி கிளின்டன், “நீங்கள் உங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் விஷப் பாம்புகளை வைத்துக் கொண்டு அது உங்கள் அண்டை வீட்டாரை மட்டுமே கடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. அந்த பாம்பு அதை அங்கே விட்டவர்களையும் கடிக்கும். பாகிஸ்தான் இதுபோன்ற அறிவுரைகளை ஏற்காது என்று தெரியும் என்று பாகிஸ்தான் பயணத்தின் போது சொல்லியிருந்ததை நான் இங்கு நினைவு கூர்கிறேன்” என்றார். ஆகையால் பாகிஸ்தான் திருந்தி ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க வேண்டும் ” என்றார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ-

“நான் இந்தியாவுக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒசாமா பின்லேடன் தற்போது உயிருடன் இல்லை. ஆனால், குஜராத்தின் கசாப்பு கடைக்காரர் இருக்கிறார்… அவர் இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் (பிரதமர் மோடி) பிரதமராகும் வரை அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டது. இவர்தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமரும். ஆர்எஸ்எஸ் என்றால் என்ன? ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஹிட்லரால் ஈர்க்கப்பட்டவர்கள். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதம மந்திரி மற்றும் வெளியுறவு அமைச்சர் இவர்கள் தான்,” என்று கூறினார்.

பின்னர் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பூட்டோ சர்தாரி ,

 

“இந்தியாவை விட பயங்கரவாதத்தால் நாங்கள் அதிக உயிர்களை இழந்துள்ளோம். இந்தியா காற்றில் விளையாடுகிறது. இது முஸ்லிம்களை பயங்கரவாதத்தில் அடைப்பதை “மிக எளிதாக” செய்துள்ளது. “இந்தக் கோட்டை இந்தியா மிகவும் சாமர்த்தியமாக மங்கலாக்கியுள்ளது, எங்களைப் போலவே உண்மையில் பாதிக்கப்பட்ட பயங்கரவாதிகளை உருவாக்குகிறது. பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கும் இந்த தத்துவத்தை இந்தியா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது“ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நேபாளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இந்தியர்

east tamil

அமேசோன் நிறுவன 1,700 ஊழியர்கள் பணிநீக்கம்

east tamil

பிரித்தானிய கடல் எல்லைக்குள் நுழைந்த 2வது ரஷ்ய கப்பல்

east tamil

மியன்மாரில் நிலநடுக்கம்

east tamil

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகும் திகதி அறிவிப்பு

east tamil

Leave a Comment