போதிய உணவில்லாததால் கொழுப்பில்லை: வடக்கு, கிழக்கு கால்நடை உயிரிழப்பின் காரணம்!

Date:

வடக்கு கிழக்கில் அண்மையில் அதிகளவான கால்நடைகள் உயிரிழந்தமைக்கு, அவற்றின் உடலில் போதிய கொழுப்பு இல்லாததே காரணமென தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் வசீகரன்.

உடலில் கொழுப்பில்லாத காரணத்தினால் குளிர் அதிர்ச்சியை தாங்க முடியாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் திறந்த வெளியில் வளர்க்கப்படும் கால்நடைகள் மூலம் பாலுற்பத்தி குறைவாகவே உள்ளது. எனினும், இலங்கையின் இறைச்சி தேவையில் 65 வீதத்தை இந்த இரண்டு மாகாணங்களுமே பூர்த்தி செய்கின்றன.

எனினும், திறந்தவெளியில் கால்நடைகளை வளர்ப்பது சாத்தியமில்லை.

பொருத்தமற்ற இடத்தில் வளர்க்கப்படும் கால்நடைகள் பேதிய உணவில்லாமல், உடலில் கொழும்பு இல்லாமல் காணப்பட்டன. இதனால் குளிர் அதிர்ச்சியில் சிக்கி இறந்துள்ளன.

மாடுகள் யாழ் மாவட்டத்தில் – 1 , கிளிநொச்சியில் -529, முல்லைத்தீவில்- 524, வவுனியாவில்- 29 உயிரிழந்தன.

ஆடுகள் யாழ் மாவட்டத்தில் – 77, கிளிநொச்சியில் -266, முல்லைத்தீவில்- 199, வவுனியாவில்- 52 உயிரிழந்தன என தெரிவித்தார்.

மன்னாரில் உயிரிழப்பு பதிவாகவில்லை.

spot_imgspot_img

More like this
Related

அனோஜன் விவகாரம்: பிரதி சபாநாயகர் தலைமையில் சவுதி செல்லும் நாடாளுமன்றக்குழு!

புலம்பெயர் தொழிலாளி அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இலங்கை...

நிறுத்தாமல் சென்ற கார்: கண்ணாடியை உடைத்து சாரதியை கைது செய்த பொலிசார்!

கிரியுல்ல பகுதியில் காவல்துறையினரின் நிறுத்த உத்தரவைப் புறக்கணித்து அதிவேகமாகச் சென்ற சொகுசு...

யாழில் காரை சிதைத்த டிப்பர்

யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி பகுதியில் இன்று காலை டிப்பர் வாகனமும் காரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்