25.3 C
Jaffna
January 25, 2025
Pagetamil
இலங்கை

ஜனசக்தி தலைவர் இறுதியாக சந்திக்க சென்றவர் வர்ணனையாளர் பிரையன் தோமஸ்!

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான ஆரம்ப விசாரணையில், முன்னாள் கிரிக்கெட் தொகுப்பாளர் பிரையன் தோமஸை நேற்று சந்திக்க ஷாஃப்ட்டர் திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. ஷாஃப்ட்டரின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவாவின் கூற்றுப்படி, ஷாஃப்டர் மற்றும் பிரையன் தோமஸ் ஆகியோருடன் கூறப்படும் நிதி தொடர்புக்கும், நேற்றைய ஷாஃப்டரின் மரணத்திற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை புலனாய்வாளர்கள் இன்னும் விசாரித்து வருகின்றனர். ஒப்பந்தத்தின் பேரில் திட்டமிட்டு இந்த குற்றம் நடந்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நேற்று பொரளை பொது மயானத்தில் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) தற்போது முன்னெடுத்து வருகிறது. கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

குற்றச் செயல் இடம்பெற்ற பொரளை மயானத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று காலை சென்றுள்ளனர். சிறப்பு CID குழுக்கள் பொரளை பொது மயானத்தில் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள CCTV காட்சிகள் மற்றும் தொலைபேசி பதிவுகளை பகுப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளின்படி, தினேஷ் ஷாஃப்டரின் கார் Farm வீதியில் உள்ள வாயில் வழியாக பொரளை மயானத்திற்குள் நுழைந்ததாக தெரியவந்துள்ளது. இரண்டு மற்றும் மூன்றாம் சுடுகாடுகளுக்கு இடையே உள்ள வெறிச்சோடிய பகுதியான விமானப்படை நினைவிடம் அருகே கார் நிறுத்தப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

தினேஷ் ஷாஃப்டர் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக  வியாழன் அன்று பிற்பகல் 2- 3 மணிக்குள் கொழும்பு மலர் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து  சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 1.4 பில்லியன் கடனாகப் பெற்ற முன்னாள் விளையாட்டுத் தொகுப்பாளரும் வர்ணனையாளருமான பிரையன் தோமஸை சந்திக்கப் போவதாக ஷாஃப்டர் தனது செயலாளரிடம் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் விளையாட்டு தொகுப்பாளர் பிரையன் தோமஸ் ரூ. 1.4 பில்லியன் நிதி மோசடி செய்ததாக மார்ச் 20, 2019 அன்று சிஐடியில் தினேஷ் ஷாஃப்டர் புகார் அளித்ததை தொடர்ந்து, 2021 இல் பிரையன் தோமஸ் கைதாகினார்.

அப்போது முன்னாள் விளையாட்டுத் தொகுப்பாளர், இடைத்தரகராகச் செயல்படும் போது, இலங்கையில் உள்ள பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்யும் நோக்கில், தொழிலதிபரிடம் கடன் கேட்டிருப்பது தெரியவந்தது. எவ்வாறாயினும், சந்தேக நபர் 2021 பெப்ரவரி 19 அன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வியாழன் மாலையில் இருந்து தினேஷ் ஷாஃப்டர் பதிலளிக்காததால், அவரது மனைவி ஜிபிஎஸ் மூலம் ஷாஃப்டரின் இருப்பித்தை கனத்தையென கண்டுபிடித்தார்.

பின்னர் அவரது மனைவி இந்த விஷயத்தை ஒரு ஊழியரிடம் தெரிவித்தார், அவர் அங்கு சென்றபோது ஷாஃப்டர் ஓட்டுநர் இருக்கையில் கை கட்டப்பட்டு மூச்சுத் திணறலுடன் காணப்பட்டார். பின்னர் மயானத்தின் தொழிலாளியின் உதவியுடன் ஊழியர் அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த ஷாஃப்டர், மாரடைப்பு ஏற்பட்ட சில மணி நேரத்தில் இறந்தார்.

பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவிய மயானத்தில் பணிபுரிந்த ஊழியரிடமும் சிஐடி வாக்குமூலம் பதிவு செய்தது.

பொரளை பொலிஸாரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்

east tamil

இந்திய மீனவர் அத்துமீறல்: எதிர்க்கட்சி தமிழ், முஸ்லிம் எம்.பிகளை சந்தித்த மீனவர் பிரதிநிதிகள்!

Pagetamil

பாராளுமன்றத்தில் முதன்முறையாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழா

east tamil

கைதிகள் நலனுக்காக யாழ். சிறையில் கணினி மையம்

east tamil

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமனம்

east tamil

Leave a Comment