Pagetamil
இலங்கை

கோட்டா அழிந்தது ஒரு பெண்ணால்: விமல் தகவல்!

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மக்கள் போராட்டக்காரர்களை ஒரு கையால் கட்டுப்படுத்தியதாகவும், மற்றொரு கையால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கட்டுப்படுத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

தூதுவர் ஜூலி சுங் கருத்து தெரிவிக்கும் போது மௌனமாக இருப்பதுதான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிகப்பெரிய பிரச்சினை என தெரிவித்தார்.

கேகாலையில் நடைபெற்ற மேலவை இலங்கை கூட்டணியின் கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

அண்மைய மாதங்களில் முன்னாள் ஜனாதிபதியுடன் அமெரிக்கத் தூதுவர் வழமையான சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“இது அனைவருக்கும் தெரியும், ஆனால் பயத்தில் யாரும் எதுவும் சொல்லவில்லை. முன்னாள் ஜனாதிபதியின் மிரிஹானவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லம் எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்ட நாளன்று தூதுவர் சுங் அவரது வீட்டிற்குச் சென்றார். அவர் வந்து அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார். அவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர் என்றும், அதன் மூலம் ராஜபக்சவுக்கு நிவாரணம் வழங்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார்“ என வீரவன்ச குற்றம் சாட்டினார்.

அமெரிக்க தூதுவரின் வலையில் கோட்டாபய சிக்கியுள்ளதாக வீரவன்ச மேலும் குற்றம் சுமத்தியுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி எடுத்த அனைத்து முடிவுகளையும் அவர் தூதுவர் சுங்கிடம் தெரிவித்து பின்னர் அவரது அறிவுறுத்தலின்படி செயல்படுத்தினார். எதிர்ப்பாளர்களை அகற்றும் முடிவை ஜனாதிபதி எடுத்தபோது, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பாதிக்கும் என்று கூறி தூதுவர் சுங் அதை தடுத்தார்,” என்று வீரவன்ச குற்றம் சாட்டினார். .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment